ஸ்டார்ட் அப் - இன்றைய இந்தியாவின் பொருளாதாரப் புரட்சி இந்த இரண்டு மந்திர வார்த்தைகளைத்தான் நம்பி உள்ளது. புதிய தொழில் தொடங்குவது இன்றைய யுகத்தில் எளிமையாகப்பட்டிருக்கிறது. பெரிய அளவில் பணம் இருப்பவர்கள் மட்டுமே புதிய தொழில் தொடங்க முடியும் என்ற நிலைமை மாறி இருக்கிறது. ஸ்டார்ட் அப் என்றால் என்ன, ஸ்டார்ட் அப் தொடங்குபவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் யாவை, ஸ்டார்ட் அப்பில் எதிர்கொள்ள நேரும் சிக்கல்கள் என்னவாக இருக்கும், புதிய தொழிலுக்கான முதலீடு மற்றும் மேலதிக நிதி தொடர்பான நிர்வாகத்தை எப்படிச் செய்வது, அதற்கு உதவும் அமைப்புகள் இருக்கின்றனவா என்று ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் எளிதாக விளக்கி இருக்கிறார் ஜெயராமன் ரகுநாதன். நூலாசிரியருக்கு மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைத் துறையில் இருக்கும் அனுபவம், பல ஸ்டார்ட் அப்கள் உருவாக்கி அதை நிர்வகித்த தகுதி போன்றவை இந்தப் புத்தகத்தை நேரடி அனுபவ ஆவணமாக மாற்றுகின்றன.
Be the first to rate this book.