1956 பிப்ரவரி 25 அன்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆம் கட்சிக் காங்கிரஸில் நிகிதா குருச்சேவ் நிகழ்த்திய இழிவான ‘இரகசிய உரை’யில் ஸ்டாலின் ( மற்றும் பெரியாவின் ) மீதான குற்றங்கள் என அவர் ‘அறிவித்த’ ஒவ்வொன்றும் ஆதாரங்களோடு பொய்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளன.
குருச்சேவ் உரையின் நேரடி விளைவாகவும், 1961-இல் 22-ஆவது கட்சிக் காங்கிரசில் ஸ்டாலின் மீதான குருச்சேவின் இன்னும் கடுமையான தாக்குதல் காரணமாகவும் உலக கம்யூனிஸ்ட் இயக்கம் வீழ்ச்சியுறத்துவங்கியது. கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே புரட்சிகர நோக்கங்களுக்கு மாறாக சீர்த்திருத்தவாதமும், ‘முதலாளித்துவத்தோடு சமாதான சகவாழ்வு சிந்தனைகளும்’ ஆதிக்கம் செலுத்தின. முன்பு மிகச்சிறிய, மதிப்பிழந்த சக்தியாக இருந்த எதிர்ப்புரட்சி டிராட்ஸ்கியம் புத்தெழுச்சி கண்டது; ஏனென்றால், லியான் டிராட்ஸ்கி ஸ்டாலின் மீது குருச்சேவ் கமத்திய அதேகுற்றங்களை அதற்கு முன்பே சுமத்திருந்தார்.
Be the first to rate this book.