தமிழகத்தின் துணை முதல்வர் என்ற இன்றைய நிலையை அடைவதற்குமுன் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த கரடு முரடான பாதையை எளிய நடையில், அழுத்தமான சம்பவங்களோடு விவரிக்கும் முழுமையான நூல் இது. திருமணம் ஆன ஐந்தாம் மாதமே 'மிசா' சட்டத்தின் கீழ் அவர் கைதான அந்தத் தருணங்களையும், சிறையில் அவரைக் குறிவைத்து அரங்கேறிய கொடுமைகளையும் பற்றி இந்த நூலில் படிக்கும்போது, ஒரு உண்மை சட்டென மேலெழும்பி வரும். 'தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகனாகப் பிறந்துவிட்டதாலேயே மு.க.ஸ்டாலின் இத்தனை வேகமாக முன்னேறி வந்தாரா?' என்ற கேள்விக்கான பதிலைச் சொல்லும் உண்மை அது!
Be the first to rate this book.