மிகப்பழங்காலத்திலிருந்தே முனிவர்களாலும், பக்தர்களாலும் பாடப்பட்ட பல பகவந் நாமங்களைத் தொகுத்து அருமையான நாமங்கள் உருவிலான சாத்திரமாக ஆக்கினார் வேத வியாசர். அதுவே ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்பது. தம் கடைசிக் காலத்தில் தர்ம புத்திரன் கேட்க பீஷ்மர் உபதேசித்த அற்புதமான உயிர்க்குலப் பொதுவான தர்மம் என்று இதனைப் பெரும் உரையாசிரியர்களாகிய பகவத்பாத ஸ்ரீஆதிசங்கரரும், கூரத்தாழ்வான் குமாரரான ஸ்ரீபராசர பட்டரும் போற்றுகிறார்கள் என்றால் இதன் சிறப்பை நாம் உணரலாம். சாத்திரக் கருத்துக்களை நாமங்கள் உருவில் எப்படி வேத வியாசர் அமைத்து வைத்திருக்கிறார் என்பதை உணர நமக்கு உதவுவன பெரும் ஆசார்யர்களின் உரைகள். அவ்வாறு உரைகளின் துணை கொண்டு ஆழ்பொருள் உணர்வதுதான் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் படிப்பது என்பதாகும். அத்தகைய படிப்பிற்கு ஓர் எளிமையான அறிமுகமாக இந்த நூல் வருகிறது. நாமங்களை ஜபித்தல், நாமங்களின் ஆழ்பொருள்களைத் தியானம் செய்தல் என்னும் அனைவருக்கும் பொதுவான ஆன்ம சாதனத்திற்கு இந்த நூலின் விளக்கங்களும், இதில் தரப்படும் அநுபந்தங்களும் துணை செய்யும்.
Be the first to rate this book.