உலகம் முழுவதிளுமுள்ள லட்சக்கணக்கான வாசகர்களின் சிந்தனையைத் தட்டியெழுப்பிய ஹோவர்ட் ஃபாஸ்ட்டின் பேணா முனையிருந்து சிதறிப் பாய்ந்த கண்ணைப் பறிக்கும் ஒளிக்கற்றைதான் ‘ஸ்பார்ட்டகஸ்‘. ரத்தவெறி பிடித்த ரோமாபுரி ஆட்சியாளருக்கு எதிராக அடிமைகளை ஒன்றுதிரட்டி, ரோமாபுரியையும் அதன் கருத்தோட்டங்களையும் ஒழித்துக்கட்ட தீவிரப் போராட்டம் நட த்தியவன் ஸ்பார்ட்டகஸ்.
ஸ்பார்ட்டகஸ் செய்த புரட்சி, வரலாற்று இரும்புக்கால்களின் கீழே நசுங்கிவிட்ட்து. சரித்திரத்தின் இருட்டறையில் அமிழ்ந்துவிட்ட அந்த உணர்ச்சிமயமான கதையை வெளிக்கொணர்ந்து ஹோவர்ட் ஃபாஸ்ட் நம் முன்னே வைத்துள்ளார். மனிதச் சமுதாயத்தில் பெரும்பான்மையினர் உடலை உருக்கி உழைத்துப் படைத்த செல்வச் சுகங்களை ஒருசிலர் தமதாக்கிக் கொண்டு சுரண்டிக் கொழுக்கும் காலம் தொடரும் வரை ‘ஸ்பார்ட்டகஸ்’ பெயர் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்; அது போர்க் குரலாய் நம்மை அழைத்துக் கொண்டே இருக்கும்.
Be the first to rate this book.