"சோழன்தலை கொண்ட வீரபாண்டியன்' - இதுதான் நாவலின் தலைப்பு... ஒரு வரியில் சொல்வதென்றால் இதுதான் நாவலின் கதை. இந்நூல் தமிழ் சரித்திர நாவல் உலகின் புதுவரவு. புதுமையான வரவும் கூட!
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகம். பாண்டியர்களின் ஆட்சி தளர்ந்து இருக்கும் காலம். சுந்தரபாண்டியரும் வீரபாண்டியரும் அவர்களின் தாத்தா வீடான சேர நாட்டிலே அடைக்கலமாக இருக்கிறார்கள். ஏறத்தாழ தமிழகம் முழுவதும் சோழர்களின் கைவசமாக உள்ளது. பாட்டனாரின் பாதுகாப்பிலே வாழ்ந்த சுந்தரபாண்டியரும் வீரபாண்டியரும் மீண்டும் வந்து மதுரையில் ஆட்சியைப் பிடிக்கிறார்கள். அவர்கள் அமைக்கும் வியூகம் எத்தகையது என்பதை ஜிராவின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழைத்துச் சென்று காட்சிப்படுத்துகிறது. சரித்திர ஆதாரங்களை அழகழகான வர்ணனைகளோடு சுவாரசியமாக எழுதிச் செல்கிறார் ஜிரா. சரித்திர நாவலுக்கான மெனக்கெடல்தான் இவருடைய சிறப்பு. ஆச்சரியப்படுத்தும் இன்னோர் அம்சம் இவரது வரலாற்று அறிவும் வரலாற்றுப் பார்வையும்.
* தமிழ்மகன்
Be the first to rate this book.