‘கம்யூனிஸ்ட்கள் நாத்திகர்கள்; ஆகவே மதநம்பிக்கையாளர்களான பெரும்பான்மை மக்களின் உணர்வுக்கு எதிரானவர்கள்’ என்ற கருத்தை மதவாதிகள் தொடர்ந்து மக்களிடையே பரப்பி வருகிறார்கள். இந்த பிரச்சாரம் மதவாதிகள் எதிர்பார்த்த அளவுக்கு பலனை அளிக்கவில்லை என்றாலும் மதத்தின் பெயரால் நடத்தும் மாபாதக செயல்களை நியாயப்படுத்த இதனை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் உண்மையோடும், உறுதியோடும் போராடும் கம்யூனிஸ்ட்கள் மீதான நம்பிக்கையையும், மதிப்பையும் மக்கள் எக்காலத்திலும் இழக்கவில்லை. எனினும் மதம் தொடர்பாக கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன ? புரட்சி நடைபெற்ற சோவியத் ரஷ்யாவில் மத விவகாரங்கள் எப்படி கையாளப்பட்டன? மத உணர்வாளர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் ? என்பதை மக்கள் முழுமையாக புரிந்து வைத்துள்ளார்கள் என்று சொல்ல முடியாது.
இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக ‘சோவியத் ரஷ்யாவில் முஸ்லிம்கள்’ என்ற பெயரில் ஒரு சிறுநூலை ‘நீந்தும் மீன்கள்’ வெளியீட்டகம் கொண்டு வந்துள்ளது.
Be the first to rate this book.