இந்நூலிலுள்ள அநேகக் கதைகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் ஆசிரியர்களை இணையத்தில் (கூகிள் தமிழில்) தேடினால் இதுவரை கிடைக்காத ருஷ்ய எழுத்தாளர்களாக இருக்கின்றார்கள் என்கிற ஆச்சரியத்துடனேயே இத்தொகுப்பை வாசிக்கத் தொடங்கலாம். அதனாலேயே இவர்களது படைப்புகள் எதனால் தொடர்ந்து வாசிக்கப்படாமல், கவனம் பெறாமல்போனது என்கிற ஐயமும் எழுகிறது.
உலகப்போர் நடந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட இக்கதைகள், யதார்த்தத்தை அழகியலுடன் சொல்லும் விதத்தில் தேசப்பற்று, காதல், தனிமைத் துயர், சாகசம் என நவீனத்துவத்தின் ஒரு சூழலை ருஷ்ய நிலத்திலிருந்து காட்டுகின்றன.
- ஜீவ கரிகாலன்
Be the first to rate this book.