ஒரு முறை மதுரை மீனாச்சியம்மன் ஆலயத்தில் ஒரு ஜெர்மன்கார்ரை சந்திக்க நேரிட்டது. மீனாட்சியை தரிசிக்க அவர் முயன்று கொண்டிருந்தார். கையில் ஒரு தேங்காய்பழத்தட்டு. அத்துடன் பெரிய மாலை ஒன்றும் அவரிடம் இருந்தது. ஆனால் ஜதீக காரணங்களுக்காக ஆலய நிர்வாகம் கருவறைக்குள் அவரை அனுமதிக்கவில்லை.அவர் முகத்திலோ பெரிய அளவில் வருத்தம்.அந்த சந்தர்ப்பத்தில் தான் அவரைச் சந்தித்தேன். ஜெர்மனியில் இருந்தாலும் இந்துமதம் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தார். உங்கள் மதம் மனித வாழ்வின் எல்லா பக்கங்களையும் பற்றி விலாவாரியாக பேசுகிறது.
Be the first to rate this book.