மொழியின் கற்பனையான பகுதிதான் கவிதை.
கவிதையின் வெளிப்படையான பகுதிதான் மொழி.
கற்பனை என்பது மேலதிக சிந்தனை.
மொழி என்பது கருவி.
தீக்குச்சியும், தீப்பெட்டியும் உரசிக்கொள்ளும்போது தோன்றி மறையும் சுடரைப் போன்றது கவிதை.
புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, சுடர் தெரியும்.
முயற்சிக்கும் அளவைப் பொறுத்து அந்தச் சுடர் நீடிக்கும் காலம் வசப்படும்.
இந்தக் கவிதைச் சுடரை ஏந்தி பயணிக்கும் பலரில் தனித்துத் தெரியும் மிகச்சிலரே உள்ளனர்.
அதில் ஒருவராகவே நான் இளங்கவிஅருளைக் காண்கிறேன்.
அதுவே அவரின் கவிதைகளிலும் நிறைந்து கிடக்கிறது.
- றியாஸ்குரானா – இலங்கை
Be the first to rate this book.