மக்களையும் கவிதையையும் ஒன்றுசேர்க்க என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கவிதையும் மக்களும் என்றும் இல்லாத அளவுக்கு இவ்வளவு விலகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மக்கள் கவிதைக்கென்று இருக்கும் ஒரே ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு ப்ரெவெரின் படைப்புகள்தான்... பாமர மக்களின் மொழியை அவர் இயல்பாகப் பேசுகிறார்; அவர்கள் மொழியின் கற்பனை வளம், அதில் மறைந்திருக்கும் மேதாவிலாசம், சிக்கல்கள், இவற்றுடன் நேரடித் தொடர்பு கொண்டிருக்கிறார். பாமர மனிதனுக்கென்று ஒரு தொன்ம உலகம் (mythology) இருக்கிறது; அவனுடைய அன்றாட வாழ்க்கைக்குள் இருந்துகொண்டுதான் அதைக் கண்டுபிடிக்க முடியும். கிட்டத்தட்ட ப்ரெவெர் மடடும்தான் அதற்குள்ளேயே இருக்கிறார், வெளியேஇல்லை.
Be the first to rate this book.