மூச்சடக்கி மூழ்குபவர்கள் மட்டும்தான் இத்தகைய நல் முத்துக்களை அள்ளிக் கொண்டு வரமுடியும். கடலில் இறங்கித் தேடுபவர்கள்தான் அதை அடைய முடியும். தேடுங்கள், கிடைக்கும் என்பது கூட ஒரு வகையிலான சாகாவரம் பெற்ற சூஃபி மொழிதான்.
ஒவ்வொருவருக்குள்ளும் சூஃபி தன்மை உண்டு என்கிறது சூஃபியிஸம். எனினும் சிலரே அதனை வெளிக்கொணர்ந்து சூஃபிகள் ஆகி விடுகின்றனர். மற்றவர்கள் மூடப்பட்ட விதைகளாக, முளைக்காமலேயே இருந்து விடுகின்றனர். மனித வாழ்வின் முழுமைக்கு சூஃபிகள் ஆற்றிய தொண்டுகள் மகத்தானவை. எனினும் கடலின் அடியில் கிடக்கும் முத்துக்கள் போல் அவை மக்களால் உணரப்படாமலேயே உள்ளன.சூஃபிகளின் வாழ்க்கை,
சூஃபிகளின் கதைகள், சூஃபி மொழிகள் இவற்றில் கூறப்படாத எதுவும் எந்தச் சமயங்களிலும் இல்லை. நீதிக் கதைகளில் சொல்லப்படுவதுபோல் இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் என்பது போன்ற நேரிடையான விளக்கங்கள் எதுவும் அதில் சொல்லப்பட்டிருக்காது. ‘பொல்லாத உலகம் இது. இதில் அறிவாளிக்கும் அபராதம்தான். முட்டாளுக்கும் அபராதம்தான்’ என்கிறார்.
சூஃபி ஞானி சா அதி. ‘உலக வாழ்க்கை துன்பமயமானது’ என்கிறார் புத்தர்.சூஃபி ஞானம் விவரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. நீ எந்தப் பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் தொடர்ந்து பயணித்தால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. யார் எந்த வழியில் பயணித்தாலும் முடிவில் அங்குதான் சென்று சேருவார்கள் என்கிறது அது.
Be the first to rate this book.