நிலங்கவின் கதைகள் அதிகாரத்துக்கு எதிரான போர்க்குரலாக, மக்களின் தளத்திலிருந்து ஒலிக்கும் வெளிப்பாடாக இயக்கமுறுகின்றன. இதனூடாக நிலங்க அலெக்ஸாண்டரின் விரிந்த மனதை, பரந்த சிந்தனையை, அவர் விளையும் புதிய அரசியலை, செழுமையான பண்பாட்டுச் சூழலை, புதிய சமூகத்தை எனப் பலவற்றோடும் அறிமுகமாகிறேன். இப்படி அறிந்து கொண்டு செல்லும்போது நம்முடைய மூளையும் இதயமும் இளகி விடுகின்றன. ஒரு கணம் திகைத்து, ஆடிப் போய் விடுகிறோம். நம்முடைய தலைகள் வெட்கத்தால் தாழ்கின்றன. ‘ஒட்டுமொத்தச் சிங்களச் சமூகமும் தமிழ் மக்களுக்கு எதிராகவே உள்ளது' எனத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கும் தமிழ்ப் பொது மனதில், 'அப்படியல்ல, சிங்களச் சமூகத்திற்குள்ளே வலுவான மாற்றுக் குரல்கள் உண்டு; அவை அனைவருக்குமான நியாயத்தையும் நீதியையும் உச்ச தொனியில் வலியுறுத்துகின்றன' என நிரூபித்து இந்த வெட்க உணர்வை ஊட்டுகிறார் நிலந்த. இரத்தம் சிந்தப்படும் அளவுக்குக் கூர்மையாக்கப்பட்ட இனமுரண்களால் நம்பிக்கையீனமும், கசப்பும் நிரம்பிய இலங்கைச் சூழலில், ஒரு சிங்களவரால் இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா? அதைப் பகிரங்கமாக வெளிப்படுத்த முடியுமா என்று தமிழ்ப் பொது மனதில் கேள்விகள் எழுகின்றன.
- கருணாகரன்
Be the first to rate this book.