எவரெவருடைய நாக்குகளோ பூட்டி அறுக்கப்படும் காலமிது. அவர்களுடைய உதடுகளில் முடிவற்ற அழுகுரலாக அலைந்து கொண்டிருப்பேன். துன்பப்படுதலின் மூலமே வாழ்வை உணர்கிறேன். தாதுவருட சாட்சியாகச் சொல்கிறேன். பூர்வ விவசாயத்தைக் கைவிட்ட அரசிது. விதைகளைப் பறிகொடுத்த மன்னர்கள், எங்கள் தற்கொலைச் சாவில் பரிபூரண புகலிடம் தேடுகிறோம். எங்கள் மரணத்தைப்போல தீவிரமான உறுதிப்பாட்டிற்கு இச்சமூகம் தயாராகும். எங்கள் சுயவதை அரசாங்க எதிர்ப்புகளின் அடையாளம்.
Be the first to rate this book.