கவிதை உணர்வுகளால் ஆனது எனும்போதும் வாசக மனதிற்கு எதனைக் கடத்துகிறது, எதனை உணர வைக்கிறது, எந்த அனுபவத்தினைக் கடத்துகின்றது என்பதில்தான் அதன் உள்ளார்ந்த பெறுமதி உள்ளது. தனக்கான அனுபவமாக அல்லதுதனக்கு அறியக்கிடைத்த ஓர் அனுபவமாக வாசக மனதை உணரச் செய்கின்றபோது தன்னுணர்வுக்
கவிதை பொதுத்தன்மையை பெறுகின்றது. பொது அனுபவமாக மாறுகின்றது. நவயுகாவின் கவிதைகள் வாழ்வியலோடு ஒட்டிய தன்னனுபவங்களையும், தன்னைச் சுற்றி நடந்தவற்றினதும், தன்னைப் பாதித்தவற்றினதும், தன் அறிதலுக்கு எட்டியவற்றினதும் பிரதிபலிப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. அவை மென் உணர்வுகளை, வாழ்வினை, சமூகத்தை, போரை, அரசியலை, பெண்களைப் பற்றிப் பேசுகின்றன.
Be the first to rate this book.