இருபது வருஷங்களுக்கு அப்பால் தனக்கு வரப்போகும் பெரும் கீர்த்தியை முன் கூட்டியே அறிந்து கொண்டி.ருந்தால் ஒரு சமயம் அன்று சூரியகாந்தம் மிகவும் உற்சாகத்துடன் விளங்கி இருக்குமோ என்னவோ ஆனால், வழக்கம் போல் இரவு எட்டு மணி ஆவதற்குள் கிராமத்தின் நடுநாயகமாக இருந்த மேலத்தெருவில் ஜன சந்தடி அடங்கிக் காணப்பட்டது. மார்கழி மாத ஊதக் காற்றிற்கும் பனிக்கும் பயந்தவர்கள் போல் தெரு மக்கள், அஸ்தமிக்கும் முன்பே தங்கள் இரவு போஜனத்தை முடித்துக் கொண்டு கதவை உள்புறம் அடைத்துக்கொண்டு உறங்கப் போய்விட்டனர்.
Be the first to rate this book.