தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்து வியக்காத மனிதர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா? சூரியன், சந்திரன், வைரக் கற்களாக மின்னும் நட்சத்திரங்கள், வானவில், கருமேகம் என்று வானத்தில் தென்படும் ஒவ்வொன்றும் நமக்கு அதிசயம்தான். ஒவ்வொன்றும் ஒரு புதிரும்கூட.
சூரியன், அதைச் சுற்றி வட்டமிடும் கோள்கள், ஏகப்பட்ட துணைக் கோள்கள், சந்திரன்கள், எரி நட்சத்திரங்கள், வாயு, தூசி என்று நம் தலைக்கு மேலே பல விந்தைகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
· விண்வெளி பற்றி இதுவரை நமக்கு என்னவெல்லாம் தெரியும்?
· நாம் தினம் தினம் பார்க்கும் சந்திரன் குறித்து நமக்கு என்னவெல்லாம் தெரியும்?
· புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் எப்படி இருக்கும்?
· செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற முடியுமா?
· இதுவரை விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கலங்கள் என்னென்ன கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கின்றன?
· அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் விண்வெளியில் எத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன? இதில் இந்தியாவின் பங்கு என்ன?
சூரியக் குடும்பம் குறித்து உங்களுக்கு எழும் அடிப்படைச் சந்தேகங்கள் அனைத்துக்கும் விடையளித்திருக்கிறார் நூலாசிரியர் என். ராமதுரை. அனைத்து முன்னணி இதழ்களிலும் இவருடைய அறிவியல் கட்டுரைகள் நூற்றுக்கணக்கில் வெளிவந்திருக்கின்றன.
இந்தப் புத்தகத்தைப் படித்து ரசிக்க உங்களுக்கு அடிப்படை அறிவியல் எதுவும் தெரிந்திருக்கவேண்டியதில்லை. இந்தப் பிரமாண்டமான சூரியக் குடும்பத்தைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் இருந்தாலே போதும். அடுத்தமுறை அண்ணாந்து பார்க்கும்போது வானம் முன்பைவிட அதிக ஆச்சரியமூட்டக்கூடியதாக, அதிக சுவாரஸ்யமானமாகத் தோன்றும்!
Be the first to rate this book.