1940-ல் தீவிரமடைந்த ஹைதராபாத் சமஸ்தானத்தை எதிர்த்த தெலங்கானா விவசாயிகளின் வீரம் செறிந்த ஆயுதந்தாங்கிய போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு தெலுங்கில் எழுதப்பட்ட நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும் இந்நூல்.
அன்றைய நிஜாம் சமஸ்தானத்தில் தெலங்கானா விவசாயிகள் எண்ணிலடங்கா துன்பதுரங்களை அனுபவித்தனர். தேஷ்முக்குகள் (மணியக்காரர்கள்), ஜமீன்தார்கள், போலீசார், ரெவின்யூ அதிகாரிகள், ரஜாக்கர்கள் என்னும் கொள்ளைக்கும்பல் போன்றோர் அம்மக்களுக்கு இழைத்த கொடுமைகளும் சித்திரவதைகளும் இந்நாவலில் வெகுவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அவர்களை எதிர்த்துத் தெலங்கானா விவசாயிகள் சூறாவளியாய்க் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டங்கள், செய்த தியாகச் செயல்கள், புதிய சமுதாயம் காணவிழையும் இன்றைய தலைமுறைக்கு உத்வேகம் ஊட்டும் என்பதில் சந்தேகமில்லை.
'நினைவுகள் அழிவதில்லை' நாவலுக்குப் பின் அதே போன்று ஒரு போராட்டப் பின்னணியைக் கொண்ட நாவலான இந்தப் புத்தகத்தை வாசகர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
Be the first to rate this book.