“தன் வாழ்வின் இருண்ட மூலைகளின் விளிம்புகளை நோக்கி விரக்தியுடன் துரத்தப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் ‘சூன்யப் புள்ளியில் பெண்’.
தனக்குள் அத்தனைச் சோகத்தையும் விரக்தியையும் பிர்தவ்ஸ் கொண்டிருந்தபோதும், அவருடைய வாழ்வின் கடைசி நொடிகளை அருகில்
இருந்து கண்டிருந்த என் போன்றோரிடையே, வாழ்வதற்கான உரிமையும், அன்பிற்கான உரிமையும், மெய்யான விடுதலைக்கான உரிமையும்
மறுக்கப்படும்போது அதை மீட்பதற்காகப் போராட வேண்டியதன் அவசியத்தை பிர்தவ்ஸ் வெகு காத்திரமாக உணர்த்திச் சென்றிருக்கிறார்.”
இதுவரை இருபத்தெட்டு உலக மொழிகளில் சாதவியின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகெங்கிலும் இருக்கும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களிலும் அவருடைய நூல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சாதவியின் நூல்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப்
பெற்றிருப்பதோடு, அவருக்குப் பல கௌரவப் பட்டங்களும் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Be the first to rate this book.