நிகழ்ந்த நிஜம், எதார்த்தமான வரலாறு என்பதுபோலச் சொல்லப்படும் கதைகளின் பின்னிருக்கும் கற்பிதத்தைக் கலைத்துப் பார்ப்பதன் வழியாக உருவாகும் அபத்தத்தை நகையுணர்வுடன்கூடிய மொழியில் முன்வைப்பவை காலபைரவனின் கதைகள். சொல்லவந்த பொருளைக் காட்டிலும், அதைச் சொல்லத்தேர்ந்த முறையே இக்கதைகளின் நோக்கத்தைப் பெரிதும் பூர்த்திசெய்வதாக அமைகிறது.
காலபைரவனுடைய முந்தைய இரு தொகுப்புகளான ‘புலிப்பானி ஜோதிடர்’, ‘விலகிச்செல்லும் நதி’ ஆகியவற்றினின்றும் தெரிவு செய்யப்பட்ட கதைகள் அடங்கியது இத்தொகுப்பு.
-க. மோகனரங்கன்
Be the first to rate this book.