வட துருவத்தில் இருக்கும் பெரிய பனிப் பாளங்கள் உருகுகின்றன. அதனால், கடலில் நீர் மட்டம் உயர்கிறது. நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் போகிறது. இப்படிப் பெரிய தீவுகளும், நிலப் பரப்புகளும் முழுகிப் போகும் அபாயம் நம்மை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. எதிர் காலத்தில், மழையில்லாமல் பயிர்கள் வாடி, உயிரை விடும். தண்ணீருக்கும் உணவுக்கும் வழியில்லாமல் நாம் அனைவரும் பஞ்சத்தில் சிக்கப் போகிறோம். பறவைகளும் விலங்கினங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகின்றன. இதற்கெல்லாம் காரணம் பூமி கொஞ்சம் கொஞ்சமாக சூடாகி வருகிறது. விஞ்ஞானிகளும் உலக நாடுகளும் பயப்படும் புவி வெப்பம் அதிகரித்தல் பற்றியும், அதன் பாதிப்புகளையும், எதிர்கால விளைவுகளையும் எளிமையாக எடுத்துச்சொல்லிப் புரியவைக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.