நவீன இந்தியாவில் இந்து, முஸ்லிம் மக்களின் நல்லிணக்க வாழ்வுக்குப் பெரும் அபாயத்தையும் மோதல்களையும் ஏற்படுத்தும் குறியீடாக சோமநாதர் ஆலயத் தாக்குதல் சம்பவம் உள்ளது. அந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியை ரோமிலா தாப்பர் பல தரவுகளுடன் இந்நூலில் பரிசீலிக்கிறார். கஜினியின் தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் சாதாரண இந்து மக்களும் இஸ்லாமியரும் அந்தப் பிராந்தியத்தில் மிகுந்த நல்லிணக்கத்துடன்தான் இருந்துள்ளனர் என்ற குணமூட்டும் செய்தியை இந்நூல் மூலம் ஆசிரியர் சொல்கிறார். இறந்த காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் இழப்புகளுக்காகத் தற்காலத்தில் பலிகோருவதற்கு வரலாறு ஒரு எளிய கதை அல்ல என்பதை ரொமிலா தாப்பர் இந்தப் புத்தகம் வழியாக நிர்மாணிக்கிறார்.
ஒரு இறந்தகாலச் சம்பவம், கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் பின்விளைவுகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்க முடியும் என்பதற்கான உதாரணம் சோமநாதர் ஆலயப் படையெடுப்பு. வரலாறு எழுதுதல் என்பது எத்தனை நேர்மையும் கடப்பாடும் கொண்ட பணி என்பதை இந்த நிகழ்வினூடே நமக்குச் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல்.
இது மிகச் சிறந்த வரலாறெழுதியல் ஆய்வு. இந்த விசயம் பற்றி இந்து, பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் இசுலாமியர் மீது கட்டமைத்துள்ள சிக்கலான ஒட்டுமொத்த பொய்மைகளையும் துடைத்தெறியும் திறன் வாய்ந்த அறிவார்ந்த படைப்பு இது. பல்வேறு மூலாதாரங்களினூடே பயணிப்பதன் மூலம் வியப்பூட்டும் அனுபவத்தை வாசகர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
Be the first to rate this book.