இந்த நூலில் பா.ரா.சுப்பிரமணியன், வெவ்வேறு காலங்களில், சில துறைகளில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன என்றாலும், பெரும்பான்மையான கட்டுரைகள் நூலாசிரியர் ஈடுபட்ட நாட்டுப்புறக் கலை, ஈடுபட்டுள்ள அகராதிக் கலை தொடர்பானவையே. தமிழ் நாட்டுப்புறப் பாடல்களில் முதன்முதலில் ஆய்வு செய்தவர் என்பதால் பா.ரா.சுப்பிரமணியனின் நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றிய கட்டுரைகள் மக்கள் பாடல்களின் புதுமையையும் அமைப்பையும் எடுத்துக்காட்டும் வகையில் இருக்கின்றன. அறுபதுகளில் நாட்டுப்புறத் துறையில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய ‘அமைப்பியல்’ அணுகுமுறையை இவற்றில் காணலாம். ஜெர்மனியில் 12 ஆண்டுகள் தமிழ்க் கற்பித்த போது தற்காலத் தமிழுக்கு வேண்டிய அகராதிகள் இல்லாததை உணர்ந்து, பின்னர் அவற்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டதால் அகராதிகள் குறித்து எழுத இவருக்குப் பல வாய்ப்புகள் ஏற்பட்டன. சொற்களும் அவற்றின் பொருள்களும் பயன்பாடும் ஒரு தங்கச் சுரங்கம் போல் இருப்பதை இந்தக் கட்டுரைகள் வழியாகக் காட்டியிருக்கிறார். இவர் விரித்திருக்கும் வலையின் ஊடாகச் சொற்களைப் பார்ப்பது ஒரு புது அனுபவத்தைத் தரும். இதுவே பா.ரா.சுப்பிரமணியனின் முதல் கட்டுரைத் தொகுப்பு நூல்.
Be the first to rate this book.