‘சொல்லாததையும் செய்’ அறிவுரைகள் அல்ல. தோளில் கைபோட்டு தோழமையுடன் வழிகாட்டும் செய்முறைகள்.
நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளைக் கவனித்து, அதில் இருந்து கற்றுக்கொள்ளக் கூடியவைகளைச் சுவை குன்றாமல் எவருக்கும் புரியும் வண்ணம் எழுதும் சோம. வள்ளியப்பனின் புத்தகங்கள், மற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. இந்த வாசகர்களின் எண்ணத்தை உறுதிசெய்யும் மற்றுமொரு புத்தகம், சொல்லாததையும் செய்.
சமீபத்திய நடைமுறை உதாரணங்கள், மறுக்க முடியாத, வலுவான வாதங்கள், சிந்திக்க வைக்கும் குட்டிக் கதைகள் என்று அவருக்கே உரிய சுவாரஸ்யத்துடன் வெற்றி பெறுவதற்கான அத்தனை வழிகளையும் புத்தகம் முழுக்க சொல்லிப்போகிறார் சோம. வள்ளியப்பன்.
முன்னேற வேண்டும், வெற்றி பெறவேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களும் சிந்தனைகளும் ஏராளமாய் பரவிக்கிடக்கும் பொக்கிஷங்களான, ‘காலம் உங்கள் காலடியில்’, ‘ஆளப்பிறந்தவர் நீங்கள்’, ‘எமோஷனல் இண்டலிஜென்ஸ் – இட்லியாக இருங்கள்’, ‘உலகம் உன் வசம்’ போன்ற மோட்டிவேஷன் புத்தகங்களை அடுத்து, சோம. வள்ளியப்பனின் முக்கியமான நூல், ‘சொல்லாததையும் செய்’.
Be the first to rate this book.