இது அவசர யுகம்; அவசர உணவு; அவசரப் பயணம்; எல்லாம் அவசரம். நீண்ட கவிதைகளை நிதானமாகப் படிக்க நேரமில்லை. இதை உணர்ந்த கவிஞர் அப்துல் கையூம் ‘போன்சாய்’ கவிதைகளைப் படைத்துள்ளார். இக்கவிதைகள் போன்சாய் மரங்களைப் போல சிறியனவாக இருந்தாலும் பெரிய கருத்துக்களைப் பேசுகின்றன.
- டாக்டர் கவிக்கோ அப்துல் ரகுமான்
கவிஞர் நாகூர் அப்துல் கையூம் அவர்களுக்குப் பார்க்கின்ற கண்கள் இருக்கின்றன; பதிய வைத்துக் கொள்ளும் இதயம் இருக்கிறது; பாட்டாக எடுத்துச் சொல்லும் திறமையும் பழுத்திருக்கிறது.
- கவிஞர் ஈரோடு தமிழன்பன்
சொற்களை வெறும் சொற்களாகவே பயன்படுத்தும் நாம் சாதாரண மனிதர்கள். சொற்களுக்குள் சில நேரம் வெடிமருந்தையும் சில நேரம் தேன் சொட்டையும் நிரப்பத் தெரிந்தவர்கள் கவிஞர்கள். பஹ்ரைனில் இருந்தாலும் தமிழ் அவரை நம்மோடு இணைக்கிறது. அவரது இதயம் தமிழருக்காய்த் துடிக்கிறது.
-கவிஞர் நந்தலாலா
நாகூர் தர்காவுக்கு உண்டு அலங்கார வாசல்! ஒட்டுமொத்த நாகூரின் பேரழகை எழுத்துப் பூக்களால் சித்தரித்துக் காட்டும் இவரது பேனாவின் உயரம் கண்டு பிரமித்துப் போய் நிற்கிறது நாகூர் மனாரா!
-பேரா. முனைவர் ஹ.மு.நத்தர்சா
எனக்கு ஓர் ஆச்சரியம். இவ்வளவு விரிவாகவும், இவ்வளவு சுருக்கமாகவும், இவ்வளவு எளிமையாகவும் எழுத முடியுமா? முடியும் என்று கையூம் நிரூபித்திருக்கிறார். மனசாட்சி உள்ள எந்த எழுத்தாளரும் இவரை மனதாரப் பாராட்டியே ஆக வேண்டும்.
- நாகூர் ரூமி
Be the first to rate this book.