மனுஷ்ய புத்திரன் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசியல், சமூகம், இலக்கியம், ஊடகம், பதிப்புலகம், மனித உறவுகள், ஆளுமைகள் எனப் பல்வேறு தளங்களில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள 'இஸ்லாமியர்களுக்கு ஏன் வீடு தர மறுக்கிறார்கள்?' என்ற கட்டுரை தமிழ் இந்துவில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக மாறியது. தொலைக்காட்சிகளில் ஒரு விவாதப் பொருளானது. விகடன் தடம் இதழில் வெளிவந்த 'எமக்குத் தொழில் கவிதை' கட்டுரை தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன. எழுத்தாளர்கள் விருதைத் திருப்பிக் கொடுக்கும் இயக்கம் நிகழ்ந்தபோது தமிழ் எழுத்தாளர்கள் சாதித்த மௌனம் குறித்த கட்டுரையும் பரவலான கவனத்தைப் பெற்றது.
Be the first to rate this book.