சொலவடை கவிதையாக இருப்பது, அதன் உயிர்த்தேவை. ஏனெனில், சொலவடைக்கு ஏட்டுச் சிம்மாசனம் எட்டாத ஆகாயம். மக்களின் உதடுகளில் உலவி, ஞாபகமடியில் உயிர் வாழ்ந்தாக வேண்டிய கட்டாய அவலம். ஞாபக இடுக்குகளில் சிக்கி நிற்பதற்கு, முதல் வாக்கியத்தை தொடர்ந்து தானாகவே பின் தொடர்கிற மறுவாக்கியம் என்ற தன்மை அவசியம்.
சொலவடைகளில் புழக்கமுள்ளவன் இயல்பாகவே சொல்வளமிக்க மொழியாளுமை கொண்டிருப்பான். சொலவடைகளில் ஊறித் திளைத்தவனின் காலடியில் வார்த்தைகள் வந்து சேவகம் பண்ண காத்திருக்கும்.
அப்படியொரு வரம் தருகிறது "சொலவடைகளும் சொன்னவர்களும்" என்னும் இந்நூல்.
Be the first to rate this book.