வாசிப்பு அனுபவத்தில் பெரிதும் கவனத்தை ஈர்த்த சொற்களுள் சிலவற்றைத் தெரிந்தெடுத்து இலக்கிய, இலக்கண நோக்கிலும், அவை பேச்சுவழக்கில் வழங்கிவரும் குறிப்புகளைப் புலப்படுத்தும் வகையிலும் ஆராய்ந்து நோக்கும் முயற்சி இந்நூலில் உள்ள கட்டுரைகள் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழரின் பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்தி நிற்கக்கூடிய பல சொற்கள் சங்க காலம் தொடங்கிச் சமகாலம் வரையிலும் வழங்கி வருகின்ற குறிப்புகளை இந்நூலில் உள்ள கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. சங்க இலக்கியங்களில் பயின்றுவந்துள்ள சொற்கள் எல்லாம் தமிழர்களின் பல்வேறு கூறுபாடுகளை வெளிப்படுத்தும் முகமாக அமைந்திருப்பதை இக்கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
Be the first to rate this book.