நூறு வருடங்களாக வழங்கப்படும் நோபல் இலக்கியப் பரிசை இதுவரை வென்றவர்களுள் பதினேழு பேர் பெண்கள். மேற்கானால் என்ன, கிழக்கானால் என்ன? சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் எழுத வந்தபோது எதிர்கொண்ட பிரச்னைகள் சொல்லிலடங்காதவை.
எதிர்ப்புகள், கேலி-கிண்டல்கள், அவமரியாதை, பிரசுர மறுப்பு என்று எதிலும் குறைவில்லை.
அனைத்தையும் சமாளித்து நோபல் பரிசு வரை சாதிக்க முடிந்ததென்றால் அதற்கு அடிப்படைக் காரணம், மனித குலத்தின் மீது அவர்களுக்கு இருந்த மாறாத அன்பு. இந்நூலில் சுட்டிக்காட்டப்படும் பெண் எழுத்தாளர்கள் அத்தனை பேரின் எழுத்துக்கும் அதுதான் அடிப்படை.
எழுத்துத் துறையில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு இந்நூல் ஒரு சரியான திறப்பாக இருக்கும்.
நூலாசிரியர் ஶ்ரீதேவி கண்ணன், அரசு ஊழியர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடர்ந்து எழுதி வருபவர்.
Be the first to rate this book.