கவிஞர் தேரில் அமர்ந்து
கவிதை உற்சவம் சென்றேன்
அகழியின் வெள்ளி நீரோடையில்
காற்றுக் குமிழோடு நடந்து
காதல் கொஞ்சி வந்தேன்
புல்வெளிச் சோலையில்
மறையும் மாலையில்
மழலைப் பறவையாய் மாறிப்போனேன்
மேகக் கதவு திறந்து
வளர்பிறைச் சூரியனின்
ஸ்பரிசம் பட்டு நிலவானேன்
கண்ணாடி காற்றுப் பையில்
பூக்களின் மூச்சை நிரப்பி
தேனீக்களைக் காக்கவைத்தேன்
இவையெல்லாம் ரசித்ததா... உணர்ந்ததா?
ஆம். உணர்ந்து ரசித்தது
இக்கவிதைத் தொகுப்பினை
படித்துவந்த பொழுது.
- பேபி தெரசா
Be the first to rate this book.