சமூகம், அரசியல், சினிமா மற்றும் உளவியல் என பல்வேறு தளங்களில் தாவிப் பயணிக்கும் ராஜசங்கீதனின் இந்தக் கட்டுரைகளில் முதலில் நம்மை ஈர்க்கும் அம்சம் அவரது எழுத்துநடை..!
சமூகம் சார்ந்த கட்டுரைகளில் வெளிப்படும் தார்மீக ஆவேசமும், அரசியல் கட்டுரைகளில் வாதங்களை முன்வைக்கும் கூர்மையும், சினிமா சார்ந்த கட்டுரைகளில் ஊடுபாவியிருக்கும் அங்கதமும், உளவியல் தொடர்பான விஷயங்களை எழுதும் போது தொனிக்கும் சிநேக பாவமும் என அவரது எழுத்துகள் கலைடாஸ்கோப்பில் இடப்பட்ட கண்ணாடித் துண்டாய் வண்ணம் காட்டி மிளிர்கின்றன..!
பொதுவாக முகநூலில் கிடைக்கும் கட்டற்ற சுதந்திரத்தின் காரணமாக எழுதப்படும் பல்வேறு பதிவுகளைப் போலன்றி, அத்தனை தீவிரத்தன்மையுடனும், ஆத்மார்த்தமாகவும் ராஜசங்கீதனின் இந்த தொகுப்பு உருவாகியிருக்கிறது.
Be the first to rate this book.