"மக்கள் சீனக் குடியரசில் சோசலிசம் கட்டமைப்பதைப் பற்றி, அதன் இன்றைய நிலையைப் பற்றி, அதிகாரப் பூர்வாமாக அவர்கள் சொல்வதை, வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையிலான மார்க்சிய லெனினிய ஆய்வு செய்திகளை அர்வமுள்ள தமிழ் வாசகர்களுக்கு முன் வைக்கும் முயற்சியே இந்த நூல்... இதில் முதல் பகுதியில் மக்கள் சீன குடியரசின் தலைவரும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளருமான தோழர் ஜி ஜின்பிங் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த தலைப்பில் ஆற்றிய உரைகளைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இரண்டாவது பகுதியில் பேராசிரியர் ரோலண்ட் போயர் அவர்கள் “சீனப் பண்புகளுடனான சோசலிசம் - வெளிநாட்டினருக்கு ஒரு வழிகாட்டி” என்கிற நூலின் சாராம்ச குறிப்புகள் அவரே தொகுத்து வழங்கியவை இணைத்துள்ளோம். உலகின் மக்கள் தொகையில் 25 சதவிகிதத்தினர் இன்னும் சோசலிச அமைப்பில் வாழ்ந்து வருகிறார்கள். சோசலிசத்தைக் கட்டமைக்கும் முயற்சியில் நம்பிக்கையுடன் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த நீண்ட மாற்றத்திற்கான வரலாற்று பயணத்தில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையிலான ஆய்வு செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன."
Be the first to rate this book.