சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் சோசலீசக் கருத்துகளை உருவாக்கியத்தோடு அவற்றை நடைமுறைப்படுத்திய முக்கியமானவர்களில் ரோசா லக்சம்பர்க்கும் ஒருவர். ஜார் ஆட்சியை வீழ்த்தி,சோவியத் அரசை உருவாக்கியதில் மகத்தான பங்கை கொண்டிருந்த ரோசா லக்சம்பர்க், கல்வி,மதம்,பண்பாடு பற்றி ஏராளமாக எழுதியுள்ளார். “சோசலீசமும் மதபீடங்களும்”என்ற இந்த சிறு நூல் புரட்சிக்கான தயாரிப்பு கால கட்டத்தில் 1905ல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. போலந்தில் செயல்பட்டு வந்த சமூக ஜனநாயக கட்சி இதை வெளியிட்டது. பின்னரே மாஸ்கோவில்1920-ல் வெளியிடப்பட்டது. பல்வேறு மொழிகளில் பிற்காலத்தில் பிரசுரிக்கப்பட்ட இந்த பிரசுரம்,ஒரு காலகட்டத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளானது என்பது அறியப்பட வேண்டியதாகும்..
Be the first to rate this book.