'அட, சோஷியல் மீடியாதானே, நமக்குத் தெரியாத ஃபேஸ்புக், ட்விட்டரையா இந்தப் புத்தகம் சொல்லிக் கொடுத்துடப்போகுது!' என்ற எண்ணத்துடன் இந்தப் புத்தகத்துக்குள் நுழைகிறீர்களா? நல்வரவு. உங்களுக்குச் சில இனிய (அல்லது திடுக்கிடும்) ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
ஒரு விஷயம் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது, நாம் அதை ஆண்டுகொண்டிருக்கிறோம் என்கிற (பொய்யான) மன நிறைவுதான் அந்த விஷயம் நம்மீது செலுத்தும் ஆதிக்கத்துக்கான முதல் படி. அந்த பாவனையில் நாம் மயங்கியிருக்கிற நேரத்தில் அந்த விஷயம் நம்மைச் சுழற்றி உள்ளிழுத்துவிடுகிறது.
சோஷியல் மீடியாவைப் பொறுத்தவரை அநேகமாக நாம் எல்லாரும் அந்த நிலையில் தான் இருக்கிறோம். இலவச வசதி என்று நம் கணினிகளில், செல்பேசிகளில் நுழைந்த இந்த விஷயம் கொஞ்சங்கொஞ்சமாக நம்மைத் தன்னுடையதாக்கிக்கொண்டுவிட்டது, இதில் அறிவாளிகள், அனுபவசாலிகள் என்று யாரும் மிச்சமில்லை.
என்ன செய்யலாம்? இந்த வலையிலிருந்து எப்படி மீளலாம்? அதைத்தான் இந்தப் புத்தகம் கற்றுத்தருகிறது. சமூக ஊடகங்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றிபெறுவதற்கான எளிய உத்திகளைப் படிப்படியாக விளக்கி நம்முடைய பிரச்சனையைத் தீர்க்கும் சிறந்த ப்ளூ ப்ரின்ட் இது.
கவிதைகள், புனைகதைகளில் அழுத்தமாகக் கால் பதித்த நூலாசிரியர் ஆரூர் பாஸ்கரின் முதல் புனைவல்லாத நூல் இது, அவருடைய பல்லாண்டு சமூக ஊடக அனுபவத்தின் சாரத்தை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கி உதவுகிறது.
Be the first to rate this book.