காரைக்குடியில ஒரு சோலியினு போயிருந்தேன் - அத நான் விலகிக்கிணு ஊர்ல இருக்கிற சமயம் - முதலாளி வீட்டுக்குப் போய்த்து வரணுமுனு நினைப்பு வந்திருச்சு. தாக்காட்டிப் பார்த்தேன். மனசைத் தகான் பண்ண முடியலை. சரி, போய்த்து வந்திருவமுனு புதுக்கோட்டைக் காரைப் பிடிச்சுப் போனேன்... பிள்ளையகதான் அப்படியினால், வீட்டுக்கு வந்த ஆச்சிமார் இருந்த இருப்பைப் பார்த்ததும் பத்திக்கிணு எரிஞ்சிரிச்சு. ஒரு ஆச்சி, வெள்ளைச் சேலையைக் கட்டிக்கிணு, நான்கூட முதக்கோசுல பார்த்ததும் யாரோ கைம்பொண்டாட்டியாக்குமுணு நினைச்சுப்பிட்டேன், அது இங்கிலீஸ் படிச்சதாம், இங்கிலீஸ் செருப்புக் காலோட நடுவீட்ல திரியுது. இன்னொரு ஆச்சி, காரைக்குடிக்கி பிளசர் அனுப்பி பிரியாணிப் பொட்ணம் வாங்கியாந்து, மேசைப் பலகாயில வச்சிக்கிணு அட்ணக்கால் போட்டபடி திங்கிது! அம்புட்டுப்பெரிய மாடமாளிகையில வந்தவனை ‘வா, இருன்னு’ சொல்றதுக்கு நாதியில்லை...
Be the first to rate this book.