“என் இதயத்துடிப்பை ஒரு முறை ஸ்டெதஸ்கோப் வைத்துக் கேட்டேன். அது “லப் டப்” என்று துடிக்காமல் “வனிதா..ஜெக்சன்” என்று துடித்தது. இன்றும் துடிக்கிறது” என்று தன் அப்பா அம்மா பெயர்களையே தன் இதயத்துடிப்பாகக் கொண்ட குழந்தை அவள். தன்னைப்போன்ற மனுஷரும் மனுஷிகளும் புற்றுநோயால் சாவதைக் கண்ணால் கண்டு அதற்குக் காரணமான ஸ்டெர்லைட்டை இழுத்து மூடப் புறப்பட்ட போராளி அவள். மாதாகோவில் வட்டாரத்தின் மக்களை அணிதிரட்டி அழைத்துச் சென்றவள் என்பதால் குறிவைத்துச் சுடப்பட்டவள் ஸ்னோலின். சக மனித உயிர்களின் மீது கொண்ட அவளுடைய அன்பின் இன்னொரு வடிவம்தான் போராளியாக அவள் முன் சென்றது.
Be the first to rate this book.