கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சிக்ஸ் சிக்மாவைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் சுமார் நூறு பில்லியன் டாலர் வரை சேமித்திருக்கின்றன. அதாவது, ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள். கவனிக்கவும். இந்தப் பெருந்தொகையை அவர்கள் சம்பாதிக்கவில்லை. சேமித்திருக்கிறார்கள். எப்படி?
உற்பத்தியில் ஏற்படும் பிழைகளைக் கண்டுபிடிக்க உதவும் ஓர் உத்தியாகத்தான் சிக்ஸ் சிக்மா அறிககமானது. என்னதான் ஆகிறது பார்ப்போம் என்றுதான் முயன்று பார்த்தார்கள். பிரமிப்பின் உச்சத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றது சிக்ஸ் சிக்மா. பிழைகள் நின்றுபோனது மட்டுமல்லாமல் தரத்திலும் பளிச்சென்று ஒரு முன்னேற்றம். மின்னல் வேகத்தில், அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பறந்து சென்றது சிக்ஸ் சிக்மா. நம் தயாரிப்புகள் அல்லது சேவையின் தரத்தை பல மடங்கு உயர்த்த வேண்டுமென்றால் சிக்ஸ் சிக்மாதான் ஒரே வழி என்னும் முடிவுக்கு நிறுவனங்கள் வந்து சேர்ந்தன. இன்று, உலகம் முழுவதும் உள்ள பிசினஸ் சாம்ராஜியங்கள் கடைப்பிடிக்கும் மந்திர ஃபார்முலாவாக சிக்ஸ் சிக்மா மாறியிருக்கிறது. உலை முடுக்குகளில் எல்லாம் சிக்ஸ் சிக்மா குறித்த பயிலரங்கங்கள்; கட்டுக்கட்டாகப் புத்தகங்கள்; ஆய்வுகள். பெட்டிக் கடை, பெரும் நிறுவனம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் முயன்று பார்க்கும் அத்தனை பேரையும் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் கொண்டு போய் சேர்க்கும் பிசினஸ் தேவதையாக சிக்ஸ் சிக்மா மாறியிருக்கிறது. நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. தனி நபர்களின் மேன்மைக்கும் இதைக் கடைப்பிடிக்கலாம்.
மிக எளிய சமன்பாடுகள். கயன்று பார்க்கத் தூண்டும் செயல்முறைகள். பாடப்புத்தகம் போல் படிக்காமல் ரசித்துப் படித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
Be the first to rate this book.