கூட்டுக் குடும்பம் என்ற கருத்தியல் அநேகமாக இந்த நூற்றாண்டில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு விட்டது.
நிறைய உயிர்கள் சுற்றி சூழ வாழ நேர்வது இப்போது இல்லை.
பெரிய நீர் அருவியில் குளித்து மகிழ்ந்து வாழ்ந்தவர்களை குழாயடியில் அதுவும் எப்போதாவது தண்ணீர் வரும் குழாயடியில் குளித்து மகிழச் சொன்னால் எப்படி?
குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே , இன்றைய வாழ்க்கை நிர்பந்தத்தில் அல்லது எலிகளின் ஓட்டப் பந்தயத்தில் அல்லது மஞ்சள் பூதத்தின் துரத்துதலில்.
அமைந்தது ஒரு குழந்தையாகவோ ஒரே ஒரு குழந்தையாகவோ இருந்தால்...
அந்த ஒரே ஒரு குழந்தையை பெற்றவளின் அன்பையும் ஏக்கத்தையும் தவிப்பையும்...
குழந்தைக்கு எத்தனை வயதானால் என்ன? தொட்டில் முறிந்து கீழே விழுந்த குழந்தை "அம்மா"ன்னும் "அம்மா அம்மா" ன்னும் அலறி திகைப்பதையும்…
எழுத்துக்குள் கொண்டு வருவது மொத்த தாமிரபரணியையும் ஒற்றை சொம்புக்குள் ஏந்தி வருவது போல.
Be the first to rate this book.