நாவலின் முக்கிய இரு நிகழ்வுகளான திருச்சி தொழிற்சாலைத் தீ விபத்து மற்றும் திருக்கோவிலூர் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றில் பிடிவாதமாகப் பங்கேற்கும் ஆர்த்தியைச் சித்தரித்திருப்பதன் மூலம் நாவலாசிரியரும் இதை முழுமையாகப் படைத்துக் காட்டியுள்ளார். ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே நாவலின் காலம் எனினும் "Industrial visit" செல்லும் முழுமையான அந்த ஒரு நாளில்தான் நாவலின் மைய நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. நிகழ்வுகளூடாக மழையும் ஒரு பாத்திரமாக தொடர்ந்து முகங்காட்டி வருவதை எழுதி ஆசிரியர் தம் சூழியல் நாட்டத்தையும் சூழல் நம்பகத்தையும் சிறப்புற வெளிப்படுத்தியுள்ளார்.
- ஸ்ரீ நேசன்
Be the first to rate this book.