பதின் வயதின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகம் இந்த நாவல். ஒரு சிறுமிக்கும் இளம்பெண்ணுக்குமான இடைவெளி என்பது கால அளவில் மிகச் சொற்பமானதாயிருக்கலாம். ஆனால் மனதளவில் கடக்க வேண்டிய தொலைவு சுலபமானதில்லை. அதுவும் தகுந்த வழிகாட்டுதலின்றி துணையின்றி இருக்க நேரும் ஒரு பெண்ணுக்கு அப் பருவம் தரும் அலைக்கழிப்பும் அதிர்ச்சியும் ஆழமானவை. சிக்கலான இக்காலகட்டத்தில் அச்சிறுமி எதிர்கொள்ளும் மனக் குழப்பங்கள், அவளது உடலில் ஏற்படும் கிளர்ச்சியும் குதூகலமுமான மாற்றங்கள், அவளைச் சுற்றியுள்ள மனிதர்களின் புதிரான உலகம், எப்போதும் புகைமூட்டமானதாகவே வெளிப்படும் உறவுகள், ஆசைகள், துயரங்கள், அச்சங்கள் என யாவற்றையும் எளிய மொழியில் சித்தரிக்கிறது இந் நாவல்.
Be the first to rate this book.