சப்திகாவின் கதைகளில் உள்ள பெண்கள் நம்மை கை பிடித்து அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை தரிசிப்பதற்கு. பேருந்துப் பயணத்தின் மூலம் ஒரு சிறு மீறலையாவது நடத்த துடிக்கும் மாலா, புலம்பெயர் வாழ்க்கைக்குப் பிறகு கொஞ்சநஞ்ச மிச்சத்தையாவது கபரியேலுடன் வாழத் துடிக்கும் மெர்சி, விடை கொடுக்க முடியாத கேள்விகளோடு பெயரே சொல்லாத அந்தச் சிவப்பு சேலைக்காரி, மகளின் திருமண கார்டும் கையுமாக பீட்டரை அழைக்கும் ஜெனி, பற்றி எரியும் தேருக்கு இடையே தெரியும் தெரசாவின் கண்கள், தங்க வளையலை தொலைத்துவிட்டு பதட்டத்தில் அலையும் அமுதா, இப்படியாய் எளிய பெண்களின் வாழ்வியல் சித்திரத்தை செதுக்கி இருக்கும் சிற்பியாய் சப்திகா. ரத்தமும் சதையுமான வாழ்வை பாசாங்கில்லாமல் கடத்திக் செல்லுதல் கலை. அந்தக் கலை சப்திகாவின் பேனாவிற்குள்ளும் தாண்டவமாடியிருக்கிறது.
Be the first to rate this book.