'சிவப்புப் பாறை' என்ற இந்த நாவல் சீனப் புரட்சியின் இறுதிக்கட்டத்திய நிகழ்வுகளை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். சீனாவில் தோழர் மா வோ தலைமையில் நடந்த இறுதிக் கட்டப் போராட்டத்தைக் கண் முன் நிறுத்தும் புரட்சியின் வரலாற்றுப் புதினம் எனவும் இதனைக் கொள்ளலாம். சியாங் கே -ஷேக் அரசுக்குப் பக்கபலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறான உதவிகள் செய்தன என்பதும், கம்யூனிஸ்டுகள் என்றால் அவர்கள் எவ்வாறெல்லாம் துன்புறுத்திக் கொல்லப்படுவார்கள் என்பதும் இந்த நாவலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் இளைய சமுதாயம் தங்களுக்கான பாதையினைப் புரட்சியின் மூலம் வென்றெடுத்த தியாக வரலாற்றை இப்புதினம் மிக இயல்பாகப் பதிவு செய்கின்றது. உயிருக்குப் பயந்தவர்கள் கம்யூனிஸ்டாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்பதை இந்நாவலைப் படிப்பவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.
Be the first to rate this book.