மண்ட்டோவின் காலம், இந்திய வரலாற்றின் கொந்தளிப்பு நிறைந்த, சமன் குலைந்த, பிரிவினை வெறி மிகுந்த காலம். இயல்பாகவே தன் மன சாட்சியின் குரலைப் பின்பற்றி, படைப்பு நேர்மை மிக்க கதைகளை எழுதியவர் மண்ட்டோ. உதயசங்கரின் கலையுள்ளம், மண்ட்டோவின் மனவுலகை முழுமையாகவும் ஆழமாகவும் உள்வாங்கி, இக்கதைகளின் மொழியாக்கத்தில் முனைப்புடன் இயங்கியிருப்பதன் வெளிப்படை இந்தத் தொகுப்பு.
“நாமே அறியாத நம் மனத்தின் அத்தனை மூலை முடுக்குகளிலும் பயணித்து, அங்கே கொட்டிக் கிடக்கும் சாக்கடையையும், சகதியையும் அள்ளியெடுத்து வெளியே எறிந்து சுத்தப்படுத்துகிறான் கலைஞன். அங்கே கலையின் பொன்னொளியால் அன்பெனும் சுடரை ஏற்றுகிறான்...” என்று பொருத்தமான, தேர்ந்த சொற்களால் உதயசங்கர் மண்ட்டோவிற்குப் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
இத்தொகுப்புக் கதைகளின் ஓர் எழுத்தைக் கூட மனம் நெகிழாமல், பதறாமல், ஆத்திரப்படாமல், வெறுக்காமல், நேசிக்காமல் சாதாரணமாக உங்களால் கடந்து போய்விட முடியாது. அந்த அளவிற்கு உயிர்ச்சத்து நிரம்பிய, வலிமைமிக்க, வாழ்க்கையின் உக்கிரங்களாகிய எரிமலை வெடித்துச் சிதறிப் பிரவாகமெடுத்ததைப் போன்ற கதைகள் இவை!
Be the first to rate this book.