டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சரித்திரம் படைத்தவர் மட்டுமல்ல; சரித்திரமாகவே வாழ்ந்தார்கள். பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராகவும், கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் ஆகிய துறைகளில் சாதனையாளராகவும் திகழ்ந்தார்கள். வாரி வழங்குவதில் பாரியாகத் திகழ்ந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, ‘செம்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை வாரியார் வழங்கினார். இத்தகைய பெருமைக்குரிய அவர்களது வரலாறு, ‘சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம்‘ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.
தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் அவர் செய்த திருப்பணிகள், இதில் உச்சமாக தென்காசி ராஜகோபுரத்தைக் கட்டிக் கொடுத்து ‘இரண்டாம் பராக்கிரம பாண்டியன்’ ஆனது; ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய தலைவராகச் சென்று 28 பதக்கங்களுடன் வெற்றி வீரராக திரும்பியது. இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகப் பணியாற்றி உலகளாவிய புகழைப் பெற்றது; ஆற்றிய பணிகளைப் போற்றி நாடறிந்த 5 பல்கலைக் கழகங்கள் அவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது போன்ற வரலாற்றுச் செய்திகளை ஆசிரியர் அ.மா.சாமி சுவைபட எழுதியுள்ளார். பளபளப்பான காகிதத்தில் பக்கத்துக்குப் பக்கம் அபூர்வ படங்கள்; இந்தச் சாதனைச் சரித்திரம், இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
அ.மா.சாமி
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சரித்திரம் படைத்தவர் மட்டுமல்ல; சரித்திரமாகவே வாழ்ந்தார்கள். பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராகவும், கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் ஆகிய துறைகளில் சாதனையாளராகவும் திகழ்ந்தார்கள். வாரி வழங்குவதில் பாரியாகத் திகழ்ந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, ‘செம்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை வாரியார் வழங்கினார்.
Be the first to rate this book.