என் முதல் படைப்பு திருப்பாச்சி. என் இரண்டாம் படைப்பு சிவகாசி. திருப்பாசின்னா எல்லாருக்கும் அருவா ஞாபகம் வரும். இப்ப எல்லாருக்கும் தங்கச்சி ஞாபகம் வரும். சிவகாசின்னா எல்லாருக்கும் பட்டாசு ஞாபகம் வரும். இப்ப எல்லாருக்கும் அம்மா ஞாபகம் வரும்.
“என் கையில அவன் சாப்பிட்றவரைக்கும் என்னை அம்மான்னு சொன்னான்.. என்னக்கு அவன் தயவுல நான் சாப்பிடுகிற காலம் வந்துச்சோ அன்னையிலேருந்து கிழவின்னுட்டான்.” இந்த குமறல்தான் சிவகாசியின் கரு. அம்மாவுடைய வயதான காலத்தில் அம்மாவைக் கிழவியாக பார்க்கும் அவலம்தான் இப்பொழுது நிறைய இடங்களில் நிகழ்ந்து வருகிறது. அந்த பாதிப்பின் பிரதிபலிப்பாகத்தான் இந்த சிவகாசி திரைப்படமாக உருவானது. சில படைப்புகளில்தான் நடிகன் நடிக்க முடியும், சில படைப்புகளில் தான் நடிகன் வாழவும் முடியும். சிவகாசியில் திரு. விஜய் அவர்கள் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அம்மாவாக திருமதி. கீதா அவர்களும் அண்ணனாக திரு. பிரகாஷ்ராஜ் அவர்களும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். எந்த ஒரு கலைஞனும் முழுக்க முழுக்க கற்பனையான ஒரு படைப்பை உருவாக்கிட முடியாது. அப்படி படைத்தால் அந்த படைப்பில் ஜீவன் இருக்காது. சிவகாசியும் சமுதாயத்தில் நான் பார்த்து, என் மனதில் பட்டாசாய் வெடித்த விஷயம் தான். மக்கள் இப்படத்திற்கு கொடுத்த மிகப்பெரிய வெற்றி என் உணர்வுக்கு கிடைத்த மதிப்பு!
- பேரரசு
Be the first to rate this book.