இளைய தலைமுறைக்கான சுருக்கப்பட்ட இனிய வடிவம். பல்லவ சரித்திரம் உள்ளவரை கற்பனைப் பெண்ணான சிவகாமியும் இருப்பாள். செம்மொழி உள்ளவரை சிவகாமியின் சபதம் வாழும். இதைவிடச் சிறந்த சரித்திர நாவல் தமிழில் எழுதப்பட்டதில்லை.
1946ம் ஆண்டு சிவகாமியின் சபதம் எழுதப்பட்டது. இந்நூல் பல்லவர்களின் வரலாற்றையும், சாளுக்கிய மற்றும் பாண்டிய நாடுகளுடன் அவர்களுக்கிடையான உறவுகள் பற்றி விளக்கிய புத்தகம். அக்கால தமிழ் மன்னர்கள், கலை மீதும் கலைஞர்கள் மீதும் கொண்டிருந்த மரியாதைப் பற்றியும், அன்பைப் பற்றியும் பேசுகிறது. கீழச் சோழநாட்டின், செங்காட்டாங்குடி கிராமத்திலிருந்து, காஞ்சியில் படிப்பதற்காகவும், சிற்பகலையில் தேர்ச்சி பெறவும் வருகின்ற பரஞ்சோதியின் பயணத்தில் விரிகின்றது சிவகாமியின் சபதம். சோழநாட்டில் தொடங்கி, காஞ்சி, சாளுக்கியத் தலைநகரம் வாதாபி என தொடருகின்ற பயணத்தில் பரஞ்சோதி காணும் கதை மாந்தர்கள், ஊர்கள், அரண்மனைகள் என அத்தனையும் கண்முன்னே நிகழ்த்தி காட்டுகின்றார் கல்கி.
Be the first to rate this book.