காதல் இயல்பானது அது இயற்கையில் வந்தது. அது உயிர்ப்பானது அதனால் அது மனிதமானது, அதனால் அது கவிதையானது. அதனால்தான் ஆண்டன் பென்னி இத்தனை அழகான கவிதைகள் எழுதியிருக்கிறார். காதல் எதையும் ஒளித்து வைக்காது கவிதையும் அப்படித்தான். காதலைப் பாடுவது கவிஞருக்கு கை வந்த, மன்னிக்கவும், பாதம் வந்த கலையாகி இருக்கிறது, இந்த நூலில். காதலைப் பாடும் இந்தக் கவிதைகளை வாசித்து அனுபவியுங்கள் உங்களுக்கு என் அன்பு அவருக்கு என் வாழ்த்துகள்.
அன்புடன்
கலாப்ரியா
Be the first to rate this book.