‘நூறு வயது வாழ’ என்ற தலைப்பு உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நூறு வயதுக்கு மேலும் உடல் ஆரோக்கியத்துடனும் மனத்திடத்துடனும் பலர் நம்நாட்டில் வாழ்ந்துள்ளனர். அவர்கள் சித்தர்கள்.
• சித்தர்களால் மட்டும் எப்படி நூறு வயதுவரை வாழ முடிந்தது?
• சித்தர்களது வாழ்க்கைமுறை என்ன? ஏதேனும் மந்திர தந்திரமா?
• இன்றைய நவீன உலகில் அதுபோன்று நாம் வாழ்வது சாத்தியமா?
நம் எல்லோர் மனத்திலும் எழும் இவை போன்ற கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் தெளிவான பதில்களையும் எளிமையான விளக்கங்களையும் சைதை முரளி தந்துள்ளார்.
சித்தர்களின் வாழ்க்கை, அவர்களது தவ வலிமை, இந்தச் சக்தியை அவர்கள் எப்படி அடைந்தார்கள் என அவர்களது தவவாழ்வை காட்சிப்படுத்துகிறது இப்புத்தகம். சித்தர்கள் கையாண்ட ரசவாதம், காயகல்பம், சித்திகள், மந்திரங்கள், குண்டலினி சக்தி எனச் சித்தர்களின் அற்புதங்களையும் இப்புத்தகம் விளக்குகிறது.
இந்தச் சித்தர்கள் காட்டிய வழியில் வாழ்ந்தால் நூறு வயது வாழ முடியுமா என்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் அறியலாம்.
Be the first to rate this book.