நம் வாழ்க்கை, நெறி சார்ந்தது. மனிதம் சார்ந்தது. வாழ்க்கை நெறிகள் என்பது அனைத்து மதத்திற்கும் பொதுவானவை. வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றி வாழ்பவனே நல்ல மனிதனாக இருக்கமுடியும். அப்படிப்பட்ட ஒருவனால் யாருக்கும் தீங்கிழைக்க முடியாது. அவனுக்கும் யாராலும் தீங்கு நேராது. அத்தகைய வாழ்க்கை நெறிகளை இப்புத்தகம் எடுத்துச் சொல்கிறது.
ஒரு நல்ல மனிதனுக்கு இருக்கவேண்டிய அறம், பண்பு, தனிமனித ஒழுக்கம், நேர்மை, இறைபக்தி என அடிப்படைக் குணங்களைச் சித்தர்கள் போன்ற சான்றோர் வாக்கின் மூலமாகவும் குறள் மூலமாகவும் விளக்கிக் கூறுகிறது இந்தப் புத்தகம்.
இந்த மனித வாழ்க்கை மிகச் சிறியது. இச்சிறு வாழ்வில் பெரு வாழ்வை வாழ்ந்து மனிதனுக்குள் இருக்கும் இறைவனை அடையும் பாதையை ஆசிரியர் ப.சரவணன் நமக்குக் காட்டுகிறார்.
Be the first to rate this book.