எழுத்தாளர் இராஜேஸ்வரி அரசியல், சமூகம், உலகப் போக்கு, புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வு, சாதியம், பண்பாடு என்று பல தளங்களில் நின்று தனது கதைகளில் காத்திரமாக பேசி வருகிறார். அவருடைய கதைகளுக்குள் பேசும் நுண் அரசியல் மிக முக்கியமானது. சில வரிகளில் ஒரு வரலாற்றை கடத்திப்போவதை பல கதைகளில் காண முடிகிறது.
தமிழ் வாசகர்களுக்கு அறியாத பல கதைகளை கொண்டுவந்து சேர்க்கிறார். அந்தக் கதைகளில் உலாவும் பாத்திரங்களின் வலியை, வாழ்வை சிதையாமல் வாசகனுக்கும் கடத்துவதில் இராஜேஸ்வரி எழுத்து கச்சிதமாக இருக்கிறது.
Be the first to rate this book.